கடும் பஞ்சம்.. வனவிலங்குகளை கொன்று உணவளிக்க ஜாம்பியா முடிவு!

Prasanth Karthick

திங்கள், 2 செப்டம்பர் 2024 (13:28 IST)

ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் மக்களின் உணவு தேவையை போக வனவிலங்குகளை கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கோடி நாடுகளில் ஒன்றான ஜாம்பியா வறுமையிலும் கடைக்கோடியில் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு முதலாக ஜாம்பியா பெரும் வறட்சியான சூழலை எதிர்கொண்டு வருகிறது. சுமார் 14 லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஜாம்பியா அரசு அவர்களுக்கு தினசரி உணவு வழங்க முடியாமல் தவித்து வருகிறது.

 

இதனால் ஜாம்பியாவில் உள்ள வனவிலங்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை கொன்று மக்களுக்கு உணவளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வரிக்குதிரைகள், ஆப்பிரிக்க யானைகள், காட்டெருமைகள், நீர் யானைகள், எலாண்ட் மான் வகைகள் என 723 வன விலங்குகளை கொல்ல அந்நாட்டு அரசு முடிவு செய்த நிலையில், இதுவரை 150 விலங்குகள் கொல்லப்பட்டு 63 டன் இறைச்சி உணவு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இதில் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் சவானா யானைகள் உலகளவில் அழிந்து வரும் உயிரினமாக இருந்து வருகிறது. இவ்வாறாக அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களையும் வறட்சி காரணமாக கொன்று சாப்பிடுவது கவலை அளிப்பதாக விலங்கியல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்