சிதிலமடைந்து வரும் சீனப் பெருஞ்சுவர்: கவலையில் தொல்பொருள் ஆர்வலர்கள்

சனி, 16 ஆகஸ்ட் 2014 (12:21 IST)
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் சிதிலமடைந்து வரும் நிலையில் அதைப் பாதுகாக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ள சீனப் பெருஞ்சுவர் கி.பி. 3 ஆம் ஆண்டில் இருந்து 17 ஆம் ஆண்டு வரை சுமார் 1400 ஆண்டு காலம் அந்நாட்டை எதிரிகளின் படையெடுப்பில் இருந்து காக்கும் தடுப்பு அரணாகக் கட்டப்பட்டது.

20 ஆயிரம் கிலோ மீட்டருக்ககும் மேற்பட்ட நீளம் கொண்டது இந்தப் பெரும் சுவர். இந்த சுவரை உலகின் தொன்மை வாய்ந்த கலாச்சார சின்னமாக ‘யுனெஸ்கோ’ 1987 ஆம் ஆண்டில் அறிவித்தது.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சீனப் பெருஞ்சுவரை ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் வெளிநாட்டு பயணிகள் கண்டு களிப்பதாகக் கூறப்படுகிறது.

எனினும், மிங் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1368-1644) கட்டப்பட்ட இந்த சுவற்றின் ஒரு பகுதியில் சுமார் 90 சதவீதம் சிதிலமடைந்து வருவதாக தெரிய வந்துள்ளது.

இயற்கை சீற்றங்களைத் தாங்கிக் கம்பீரமாக நின்ற இப்பகுதியில் உள்ள சுவற்றின் கற்களைப் பலர் பெயர்த்தெடுத்து சென்று விட்டதாகவும், சுவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பலர் மரம், செடிகளை வளர்த்து வருகிறது.

இதனால் அங்குள்ள சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் அமைப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சீனப் பெருஞ்சுவரை பார்க்க வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலா பயணியிடமும் 17 அமெரிக்க டாலர்களை கட்டணமாக வாங்கும் அரசாங்கம் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கலைச் சின்னத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்