வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய செல்ஃபி - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முயற்சி

திங்கள், 24 நவம்பர் 2014 (18:13 IST)
வங்கதேசத்தின் தலைநகர் டாகாவில், உலகின் மிகப்பெரிய செல்ஃபி படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. 
 
செல்ஃபி எடுத்துக் கொள்வதென்பது இப்போது புதிய பேஷனாகி வருகிறது. சில நாட்களுக்கு முன் பிணத்துடன் ஒருவர் எடுத்துக் கொண்டார். ஒருவர் உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் நின்று எடுத்துக் கொண்டார். அந்த வரிசையில் இப்போது உலகில் அதிக நபர்கள் பங்கு பெற்ற செல்ஃபி ஒன்று வெளியாகியுள்ளது.
 

 
மைக்ரோசாஃப்டின் நோக்கியா லூமியா 730 என்ற ஸ்மார்ட்ஃபோனின் விளம்பரத்திற்காக இந்த ஏற்பாட்டை அந்நிறுவனம் செய்துள்ளது. இதற்காக தனது அதிகாரப்பூர்வ முகநூலில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் பதிவு செய்து கொண்டவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 
 
இதுவரை எடுத்துக் கொண்ட செல்ஃபியிலேயே இதுவே மிகப்பெரிய புகைப்படமாக கருதப்படுகிறது.  இதற்கு முன்பு, ஆஸ்கர் விருது விழாவில் எடுக்கப்பட்ட செல்ஃபியே உலகின் மிகப் பெரியதாகக் கருதப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்