கொசுக்களுக்கு மரபணு மாற்று - மலேரியாவை தடுக்க புது வழி!

வியாழன், 26 நவம்பர் 2015 (12:45 IST)
மலேரியாவை தடுக்கும் மரபணுக்களை கொசுக்களின் மரபணுத் தொகுதிக்குள் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்தியுள்ளனர்.
 

 
இனிவரும் காலங்களில் மலேரியாவை முற்றாக இல்லாது ஒழிக்கலாம் என்பதற்கான சாத்தியம் ஒன்று இருப்பதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
 
மலேரியாவை தடுக்கும் மரபணுக்களை கொசுக்களின் டிஎன்ஏவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முறையின் மூலமே இது சாத்தியம் என அதனை உருவாக்கிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கலிஃபோர்னியா ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த புதிய வகை தொழில்நுட்பத்துடன் கூடிய கண்டுபிடிப்பு ஆட்கொல்லி நோயான மலேரியாவை ஒழிப்பதற்கான ஒரு புதிய அறிவியல் சாதனை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆய்வு கூடத்தில் இந்த பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் அடுத்தகட்டமாக களத்தில் தமது திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கூறுகின்றனர்.
 
மரபணு திருத்தியமைக்கப்பட்ட கொசுக்களின் சந்ததியிலும் 100 சதவீதம் மாற்றியமைக்கப்பட்ட மரபணு உள்ளமை பிரமிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்