அல்லா என்ற பெயரை உச்சரித்ததால் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட அமெரிக்க முஸ்லீம் தம்பதி

சனி, 6 ஆகஸ்ட் 2016 (20:22 IST)
அல்லா என்று உச்சரித்ததால் அமெரிக்க முஸ்லீம் தம்பதிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.


 

 
நாசியா மற்றும் பைசல் பாகிஸ்தான் வம்சாவளி அமெரிக்கர்கள் தங்களது 10 ஆண்டு திருமண நாளை கொண்டாட பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றுவிட்டு அங்கிருந்து ஒஹியோவிற்கு செல்ல டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்துள்ளனர்.
 
விமானத்தில் பைசலுக்கு வியர்வை கொட்டியதால் அல்லா என்று உச்சரித்துள்ளார். இதைக்கண்ட விமான பணியாலர் பைலட்டிடம் சென்று கூறியுள்ளார். அவர் உடனே விமான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அந்த தம்பதியினரை விமானத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.
 
மேலும் இதுகுறித்து அமெரிக்க – இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில், அமெரிக்க போக்குவரத்து துறையிடம் புகார் அளித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்  

வெப்துனியாவைப் படிக்கவும்