பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியர்: 6 பேர் பலி

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:05 IST)
சவுதி அரேபியாவின் ஜாசன் மாகணத்தில் ஆசிரியர் ஒருவர் மர்ம நபர் போல் வேடமிட்டு பள்ளியில் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் இறந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 
 
சவுதியில் அல் தயர் நகரில் உள்ள அந்த பள்ளிக்குள் நுழைந்த ஆசிரியர், பள்ளியின் முதல்வர் மற்றும் அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பக்கி சூட்டில் 6 பேர் பலியானதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
பள்ளியின் முதல்வருக்கும், தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.
 
சவுதியின் உள்துறை அமைச்சர் மான்சூர் துர்கி இந்த துப்பாக்கி தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய ஆசிரியரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்