மதம் சார்ந்த குற்றசாட்டு; மனமிறங்கிய சவுதி: கத்தாருக்கு சலுகை!!

வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:47 IST)
கத்தார் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டு அந்த நாட்டுடனான எல்லைப் பகுதிகள் மற்ற வலைகுடா நாடுகளால் மூடப்பட்டன.


 
 
தீவிரவாதிகளுக்கு உதவுவதால் கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரைன், ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகள் அறிவித்தன. 
 
கத்தாருக்கு வாய்ப்புகள் வழங்கியும் மற்ற வலைகுடா நாடுகளின் கோரிக்கையை கத்தார் ஏற்காததால் கத்தார் உடனான எல்லை போக்குவரத்து, கடல் வழி, தரைவழி போக்குவரத்தையும் வளைகுடா நாடுகள் துண்டித்தன.
 
இந்நிலையில், ஹஜ் பயணிகளுக்கு சவுதி அனுமதி வழங்கவில்லை என்று கத்தார் குற்றம் சாட்டியது. இதனால் கத்தார் சவுதி இடையிலான எல்லை பகுதி மெக்காவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக சவுதி அரசு அறிவித்துள்ளது.
 
சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான்,  சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தோஹா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டு கத்தாரி யாத்ரீகர்களை அழைத்து வர உத்தரவிட்டுள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்