சவுதி எண்ணை நிறுவனத்தில் திடீர் விபத்து: 11 பேர் பலி - 219 பேர் படுகாயம்

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (06:07 IST)
சவுதி எண்ணை நிறுவனத்தில் திடீர் விபத்து ஏற்பட்டதில், அங்கு பணியாற்றி வந்த 11 பேர் பரிதாபமாக பலியானார்கள். 219 பேர் படுகாயம் அடைந்தனர்.
 

 
உலகிலேயே மிகவும் பெரிய எண்ணெய் நிறுவனம் சவுதி அராம்கோ. இது சவுதியில் உள்ள கிழக்கு நகரான கோபாரில் செயல்பட்டு வருகிறது.
 
இந்த நிறுவனம் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் 77 நாடுகளைச் சேர்ந்த சுமார் 61 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
இவர்களுக்காக, தங்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு இங்கு உள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அது மேல் தளத்திற்கும் வேகமாக பரவியது.
 
இதனால், அங்கிருந்தவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என வெளியில் ஓடினர். ஆனாலும், தீயில் கருதி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 219 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்