உலகின் அழகான பெண் இவர்தான் - பீப்புள் பத்திரிக்கை வெளியீடு

வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (13:39 IST)
2015ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கை அமெரிக்காவின் ‘பீப்புள்’ பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது.
 
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிக்கையான ‘பீப்புள்’ பத்திரிரிக்கை 2015ஆம் ஆண்டின் உலகின் மிக அழகிய பெண்ணாக ஹாலிவுட் நடிகையான சாண்ட்ரா புல்லக்கை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும் அவரது புகைப்படத்தை அட்டைப்படத்திலும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
 

 
சாண்ட்ரா புல்லக்கின் வயது 50 ஆகும். இவர் ‘ஹாங்மேன்’, ‘ஸ்பீட்’, ‘தி புரொபசல்’, ‘தி ஹார்ட்’ உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2004ஆம் ஆண்டு இவருக்கு ‘மில்லியன் டாலர் பேபி’ என்ற படத்திற்காக சிறந்த நடிக்கைக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. கடைசியாக இவர் நடித்த சயின்ன்ஸ் பிக்சன் படமான ‘கிராவிட்டி’ படத்திற்கும் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
 

சாண்ட்ரா புல்லக் புகைப்படத்தை அட்டை படமாக வெளியிட்ட பீப்புள் பத்திரிக்கை
உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி கருத்து தெரிவித்த சாண்ட்ரா புல்லக், ‘‘பீப்புள் பத்திரிக்கைதான் நான் மிகவும் அழகானவள் என்று கண்டுபிடித்திருக்கிறது. வேறு எவரும் சொல்ல முயற்சிக்கவில்லை. ‘உண்மையான அழகு அமைதிதான். அதுவும் இந்த நகரில், ’ஓ... நான் அவரைப் போல இருக்க வேண்டும்’ என்று சொல்வது மிகவும் கடினமானதாக இருக்காது” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “மேலோட்டமாக அழகு என்பது மறைந்துபோகக் கூடியது. உண்மையான அழகு என்பது நல்ல மனிதராக, நல்ல தாயாக, நல்ல மதிய உணவு தயாரிப்பவராக இருப்பதுதான்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்