இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.சம்பந்தன் ஏற்பு

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (13:08 IST)
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.சம்பந்தன் பதவியேற்றார். இலங்கையில் அதிபர் செயலகத்தில் நடைபெற்ற வரும் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் 48 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் பதவி ஏற்க்கொணடார். இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித்  தலைவராக 38 ஆண்டுகளுக்கு பிறகு தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி, தற்போதைய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து ஆட்சி அமைக்கிறது. மேலும் இலங்கை கப்பல் துறை அமைச்சராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா பதவியேற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்