ரஷ்யாவில் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழா: வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன் பங்கேற்பு

வியாழன், 29 ஜனவரி 2015 (15:38 IST)
இண்டாம் உலகப் போர் வெற்றி விழாவை ரஷ்யா நடத்துகிறது, இந்த விழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்வுன் கலந்து கொள்கிறார்.
 
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் கூட்டணியாகிய ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றது.
 
ஹிட்லரின் ஜெர்மனியையும், முசோலினியின் இத்தாலியையும், ஜப்பானையும் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தெடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.
 
இந்த இண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனியை தோற்கடித்தை, ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மே மாதம் கொண்டாடப்படும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன் கலந்து கொள்ளும்படி ரஷ்யா ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.
 
இந்த அழைப்பை வட கொரியா ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், அதிபர் கிம் ஜாங் வுன் வருகையை உறுதி செய்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சந்திப்பின்போது முக்கிய உடன்பாடுகள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா நடத்தும் உலகப் போர் வெற்றி விழாவில் 20 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
2011 ஆம் ஆண்டு வட கொரிய அதிபராக கிம் ஜாங் வுன் பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக செல்லும் நாடு ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்