ரஷ்யாவில் இழுவைக் கப்பல் கடலில் மூழ்கியது: 54 பேர் பலி

வியாழன், 2 ஏப்ரல் 2015 (13:11 IST)
ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற இழுவைக் கப்பல் கடலில் மூழ்கியதில் 54 பேர் உயிரிழந்தனர்.
 
ரஷ்யவைச் சேர்ந்த இழுவைக் கப்பல் ஒன்று, 132 பயணிகளுடன் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க் கடல் பகுதியில் சென்றபோது கடலில் மூழ்கியது.


 

 
இந்த விபத்தில் மாலுமி உள்பட 54 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்தக் கப்பலில் பயணம் செய்த 132 பேரில் 78 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். மேலும், லாட்வியா, உக்ரைன், மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலர் அதில் பயணம் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த விபத்தில் சிக்கியவர்களுள், 63 பேர் மீட்கப்பட்டுள்ளதாளகவும் மற்றவர்கள் நிலை குறித்துதெரியவில்லை என்றும் மீட்பு பணிக்குழு தெரிவித்துள்ளது.
 
கப்பல் குழுவினரை மீட்கும் பணியில் 25 க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. படகு மூழ்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரையில் உறுதி படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 
இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்