180 பேரை கொன்று குவித்த ரஷ்ய விமானப் படைகள்

சனி, 7 அக்டோபர் 2017 (18:36 IST)
சிரியாவில் ரஷ்ய நாட்டு விமானப் படைகள் நடத்திய தாக்குதலில் 24 மணி நேரத்தில் 60 வெளிநாட்டினர் உள்பட 180 பேர் கொல்லப்பட்டனர்.


 


 
சிரியா நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து ஒவ்வொரு நகரமாக ராணுவத்தால் மீட்கப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் பிடியில் இருக்கும் கடைசி நகரை மீட்க சிரியா நாட்டு ராணுவ படைகள் உச்சக்கட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு துணையாக ரஷ்ய நாட்டு விமானப் படையும் தாக்குதலில் ஈடுபட்டது.
 
ரஷ்ய விமானப்படைகள் கடந்த 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 பேர் கொல்லப்பட்டனர். அல்பு கமால் நகரில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து வந்த பயங்கரவாதிகளும் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாவற்றையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 180 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடியில் அனைத்து நகரங்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சிறு பகுதிகளையும் சிரியா அரசு மீட்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்