ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மீது ரஷ்யா குண்டு மழை

புதன், 4 நவம்பர் 2015 (18:10 IST)
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள அவர்கள் தங்களின் தலைநகராக அறிவித்த ராக்கா நகரம் மீது நேற்று ரஷ்யா மற்றும் சிரியா விமான படைகள் இடைவிடாது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தியது.
 
இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் அரண்கள், பதுங்கு குழிகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனை தவிர அனைத்து இடங்களிலும் குண்டு வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீவிரவாதிகளின் தலைநகரில் நடந்த இந்த தக்குதல் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட புராதன நகரான பால்மைராவின் அருகில் இந்த வான்வழி தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்