மான்கள் மூலம் பீட்சா வினியோகம்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (19:22 IST)
ஜப்பானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு மான்கள் மூலம் பீட்சா வினியோகம் செய்யப்பட உள்ளது.


 

 
ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினிநோயகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க பிரபல நிறுவனமான டோமினோஸ் பீட்சா நிறுவனம் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது.
 
அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சா வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மான்களுக்கு மிருக பயிற்றுனர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
 
இதேபோல் நியூசிலாந்தில் டிரோன் மூலம் பீட்சா வனியோகிக்க முடிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்