சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். அது அமாவாசை அன்றுதான் ஏற்படும். இந்த கிரகணம் மனிதர்களிடம் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை காலம் காலமாக இருக்கிறது.
முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது, சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக சில அறிவுரைகளை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கிரகணத்தின் போது சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். எனவே, இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.