ஊதியம் கேட்டு மறியல் செய்த இந்திய தொழிலாளர்களை நாடு கடத்திய கத்தார்

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (18:16 IST)
ஊதிய உயர்வு கேட்டு மறியல் போராட்டம் செய்த இந்திய தொழிலாளர்களை கத்தார் நாடு கடத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கத்தார் நாட்டில் இந்திய தொழிலாளர்கள் பலரும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்து வரும் நிலையில் அங்கு உள்ள நிறுவனம் ஒன்றில் ஊதிய உயர்வு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்
 
இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மறியல் செய்த அனைத்து தொழிலாளர்களும் நாடு கடத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 7 மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் இந்தியா வங்கதேசம் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாசலில் நின்று போராடிய தாகவும் கூறப்படுகிறது
 
இன்னும் மூன்று மாதங்களில் கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளதால் இதுபோன்ற புகார்களை தவிர்க்க பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தி வந்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்