நாட்டை விட்டு வெளியேறுங்கள் 755 அமெரிக்க அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு

திங்கள், 31 ஜூலை 2017 (05:41 IST)
அமெரிக்க அதிபராக போட்டியிட்ட டிரம்புக்கு ரஷ்யாவின் புதின் அரசு மறைமுகமாக உதவி செய்தது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. சமீபத்தில் கூட இருவரும் ரகசியமாக பலமணி நேரம் சந்தித்து பேசினர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டது.



 
 
ஆனால் திடீரென சிரியா விவகாரத்தில் இருநாடுகளுக்கும் பிணக்கு ஏற்பட்டது. ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் விரைவில் டிரம்ப் கையெழுத்திட உள்ளார். இதனால் ரஷ்ய அதிபர் புதின் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவில் பணிபுரியும் 755 அமெரிக்க அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார். இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்