மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவிப்பு

திங்கள், 10 அக்டோபர் 2022 (21:04 IST)
மலேசிய பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி பின் யாகோப். இவர் கடந்த ஆண்டு ஆகஸ் 21 ஆம் தேதி மலேசியாவின் பிரதமராக இருந்த யாசின்ற்கு பதிலாக மலேசியாவில் 9 வது பிரதமராக அந்நாட்டின் அரசர் சுல்தான் அப்துல்லாவால்  நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று மதியம் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் இஸ்மாயில், மலேசியா பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும், விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறினார்.

வரும்  நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் பொதுத்தேர்தல் வரவாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகிறது. ஆனால், அப்போது மழைக்காலம் என்பதால் தேர்தல் நடத்த எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்