நவீன சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூ-வின் உடல் தகனம் - பிரதமர் மோடி பங்கேற்பு

ஞாயிறு, 29 மார்ச் 2015 (18:31 IST)
சிங்கப்பூரை நிறுவியவர் என்று அறியப்படும் லீ குவான் யூ-வின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.
 
கசப்பான உண்மைகளிலிருந்து விலகிச் செல்லாமல் தமது தந்தை சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினார் என்று லீ குவான் யூவின் இறுதி நிகழ்வில் உரையாற்றிய அவரது மகனும் தற்போதைய பிரதமருமான லீ ஸியென் லூங் புகழாரம் சூட்டினார்.
 

 
தமது தந்தை ஒரு போராளியாக இருந்தார் என்றார் லீ ஸியென் லூங். அமைச்சரவை உறுப்பினர்களும் மறைந்த தலைவரின் நண்பர்களும் இறுதி நிகழ்வில் பேசினர்.
 

 
ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்குப் பின்னர், மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
 
சிங்கப்பூரின் பிரதமராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக லீ குவான் இருந்தார் என்றாலும் அடக்குமுறை ஆட்சியை முன்னெடுத்தார் என்று அடிக்கடி விமர்சிக்கப்பட்டவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்