உலகம் முழுவதும் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் நிலையில், பெரும்பாலும் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலேயே செயலாற்றி வருகின்றன. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான செயலிகள் கூகிள் ப்ளேஸ்டோரில் அதிகாரப்பூர்வமாக கிடைக்கின்றன.
தற்போது Style Message, Blood Pressure App, Camera PDF Scanner உள்ளிட்ட 3 செயலிகளை கூகிள் ப்ளேஸ்டோர் நீக்கியுள்ளது. ஜோக்கர் என்ற மால்வேரை பயன்படுத்தி பயனாளர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரின் பேரில் கூகிள் ப்ளேஸ்டோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.