ரோமானியாவில் எஜமானரின் தாயை கொன்று தின்ற பிட்புல் நாய்

செவ்வாய், 10 மார்ச் 2015 (16:18 IST)
ரோமானியாவின் ட்ரொபெடா டுர்னு செவெரின் பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில்  வசித்துவந்த எமிலா மிட்ராய் என்பவரது உடல் வீட்டின் பின்புறம் தலை மற்றும் வலது கை இல்லாத நிலையில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
 
அவருடைய உடலுக்கு அருகே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அவரது வளர்ப்பு நாய் எமிலாவின் சதைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்ததை கண்டனர்.
 
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எமிலாவின் உடலை மீட்டனர். விசாரணையின் போது எமிலாவின் மகன் ஸ்டீபன் மிட்ராய் வீட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாயை வளர்த்திருப்பது தெரிய வந்தது. இனக்கலப்பு செய்யப்பட்ட பிட்புல் வகையைச் சேர்ந்த அந்த நாய் மூர்க்கத்தனமான குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாயை கட்டுப்பாடில் வைக்காத குற்றத்திற்காக ஸ்டீபன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்