விமானத்தை இயக்கி கொண்டிருந்த விமானிக்கு திடீர் மாரடைப்பு

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (10:20 IST)
பாஸ்டன் நகரை நோக்கி வந்த ஏர்பஸ் 320 ரக விமானம் நடுவானில் பறந்த கொண்டுருந்தபோது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அப்பொழுது அருகில் அமர்ந்திருந்த துணை விமானி விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.


 

 
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரில் இருந்து பாஸ்டன் நகரை நோக்கி ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 147 பயணிகளும், விமான ஊழியர்கள பயணம் செய்தனர்.
 
அப்பொழுது, நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானி தனது இருக்கையில் இருந்து மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு கிழே விழுந்ததை கண்டு அருகில் அமர்ந்திருந்த துணை விமானி . அதிர்ச்சி அடைந்தார். பின்னர், விமானத்தில் இருந்த ஒரு செவிலியரின் துணையுடன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சில நொடிகளுக்குள் விமானி உயிரிழந்துவிட்டார்.
 
நிலைமையை சாதுர்யமாக கையாண்ட துணைவிமானி, அந்த விமானத்தின் இயக்கத்தின் முழு கட்டுப்பாட்டையும் தனக்குள் கொண்டு வந்தார்.பின்னர், அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை கோரி அவசரமாக அந்த விமானத்தை தரையிறங்க அனுமதி கோரினார்.
 
இதையடுத்து, துணைவிமானி நியூயார்க் மாநிலம், சிராகஸ் நகர விமான நிலையத்தில் அந்த விமானத்தை தரையிறக்கினார். விமான நிலையத்தில் தயாராக காத்திருந்த மருத்துவக் குழுவினர், உயிரிழந்தா விமானியின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 5 மணிநேர தாமதத்துக்கு பின்னர் அந்த விமானம் பாஸ்டன் நகருக்கு பறந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்