உலகிலேயே அதிக விலைக்கு ஏலம்போன பிக்காஸோ ஓவியம்

செவ்வாய், 12 மே 2015 (18:05 IST)
ஸ்பானிய ஓவியர் பாப்லோ பிக்காசோ வரைந்த ஓவியம் ஒன்று மிக அதிக விலைக்கு ஏலம் போய் சாதனை படைத்திருக்கிறது.
 
"லே ஃபாம் தால்கே" ('Les Femmes D'Alger') என்ற அந்த ஓவியம் நியுயார்க்கில் நடந்த ஏலத்தில் 179 மிலியன் டாலர்களுக்கும் மேலாக ஏலத்தில் போயிருக்கிறது.
 

 
1955ம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம், அந்தப்புரக் காட்சி ஒன்றை வண்ணமயமாக, கியூபிஸ்ட் ஓவிய முறையில் சித்தரிக்கிறது.
 
கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் கேட்க வந்தோர் கூட்டம் நிரம்பிவழிந்த ஏல அறையொன்றில் நடந்த இந்த ஏலம், 11 நிமிடங்களுக்கு மேல் நடந்தது. தொலைபேசி வழியாகவும் கேட்புகள் நடந்த இந்த ஏலம் விரைவில் முடிந்தது.
 
இதே ஏலத்தில் சுவிட்சர்லாந்து கலைஞர் அல்பெர்டோ ஜியாகொமெட்டி செய்த வெண்கல சிலை ஒன்று மிக அதிக விலைக்கு, அதாவது 141 மிலியன் டாலர்களுக்கு ஏலம் போய், உலகின் மிக அதிக விலை மதிப்புள்ள சிற்பம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்