அமைதியான மசூதிகள் – டிவிட்டர் டிரண்ட்டாகும் ஹேஷ்டேக் #PeacefulMosques !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (09:18 IST)
நியுசிலாந்து படுகொலை சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் அனைவரும் அமைதியான மசூதிகள் என தங்களுடைய மசூதி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

நியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டர்ரன்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலியர் ஒருவர் நேற்று (சனிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவத்துக்குப் பல உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

படுகொலை நடந்த மசூதியை சில ஊடகங்கள் மிகவும் அமைதியான மசூதி என குறிப்பிட்டன. இதற்கு எதிர்வினைப் புரியும் விதமாக பொதுமக்கள் சிலர் அமைதியான மசூதிகள் என டிவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு அருகேயுள்ள மசூதிகளின் அமைதியையும் அவற்றின் சிறப்பையும் அந்த மசூதிகளுடனான தங்கள் மகிழ்ச்சியான அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள தொடங்கியுள்ளன.

இதனை #peacefulmosques என்ற ஹேஷ்டேக்கின் கீழ் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்