12 வயது சிறுமியை சுட்டுக்கொன்ற ராணுவம்

புதன், 20 ஜூலை 2016 (09:03 IST)
பாலஸ்தீனத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை பாலஸ்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 
 
இஸ்ரேல் ராணுவத்தினர் அடிக்கடி பாலஸ்தீன பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் புனித பகுதியான ஜெரசலேமில் இஸ்ரேல் ராணுவம் தடுப்பு சுவர் ஒன்றை கட்டியுள்ளது.
 
பாலஸ்தீனத்தை சேர்ந்த மோகியா அல் தபாக்கியை என்ற 12 வயது சிறுமி ஒருவர் அந்த தடுப்பு சுவர் உள்ள பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது இஸ்ரேல் ராணுவம் அந்த 12 வயது சிறுமி மீது ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்