பாகிஸ்தானில் ஹோலி பண்டிகை கொண்டாடிய இந்துக்கள்; மனிதக் கேடயம் அமைத்த மாணவர்கள்

வெள்ளி, 6 மார்ச் 2015 (15:06 IST)
ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள காராச்சி நகரில் இந்துக்கள் ஒன்று கூடி இந்துகோவிலில் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.
 
இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பாகிஸ்தானில் உள்ள இடதுசாரி மாணவர் அமைப்பினர் (என்.எஸ்.எப்) இந்து கோவிலை சுற்றி மனிதக் கேடயம் போன்று சுற்றி நின்று அவர்களுக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
 
இது குறித்து மாணவர் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
 
மத ஒற்றுமையை வலியுறுத்துவவே இந்த மனித சங்கிலியை அமைத்துள்ளோம். மற்றவர்களின் உரிமையை நாம் பாதுகாக்க தவறினால், நாளை நமது உரிமையை பாதுகாக்க யாரும் வரமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
 
பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு இந்து மதத்தினர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்