விமானி அபிநந்தன் சிக்கியது எப்படி ? – பாகிஸ்தான் நாளேடு பரபரப்பு செய்தி !

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (13:03 IST)
இந்திய விமானி அபிநந்தன் எவ்வாறு பாகிஸ்தான் கையில் சிக்கினார் என்பது குற்த்து பாகிஸ்தான் தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன் தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் போது இந்திய விமானி அபிநந்தன் என்பவர் பாகிஸ்தான் கையில் சிக்கியுள்ளார். அவர் பத்திரமாக இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று பாகிஸ்தான் அரசால் பகிரப்பட்டது.

இதனையடுத்து அபிநந்தன் ஓட்டிய விமானம் என்ன ஆனது, அவர் எப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார் போன்ற விவரங்களைப் பாகிஸ்தானின் டான் என்ற நாளேடு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பு பின்வருமாறு :-

பாகிஸ்தான் எல்லைக்குள் வந்த இரண்டு விமானங்கள் சுடப்பட்டன. ஒன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்திய எல்லைக்குள் விழுந்தது. மற்றொரு விமானம் வெடித்து, அதிலிருந்து புகை வர ஆரம்பித்தது. பாராசூட் மூலம் பத்திரமாகத் தரையிறங்கினார் அதிலிருந்த விமானி அபிநந்தன். துப்பாக்கியுடன் இருந்த அவர், அங்கிருந்த இளைஞர்களிடம் இது இந்தியாவா, பாகிஸ்தானா என்று கேட்டுள்ளார். அவர்கள் வேண்டுமென்றே இது இந்தியா என்று கூறியுள்ளனர். உடனே இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார் அபிநந்தன்.

அந்த கோஷங்களைக் கேட்ட இளைஞர்கள் கற்களை கொண்டு அபிநந்தனைத் தாக்க ஆரம்பித்தனர். தன் துப்பாக்கியால் வானில் சுட்டவாறே ஓட ஆரம்பித்தார் அபிநந்தன். அப்போது அருகில் இருந்த சிறிய குளத்துக்குள் குதித்தார். தன்னிடமிருந்த இந்திய ஆவணங்களையும் வரைபடங்களையும் நீருக்குள் மூழ்கடித்து அழிக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் ராணுவம் அவரை அவர்களிடம் இருந்து மீட்டுள்ளது
இவ்வாறு அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்