ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மால்வேயில் ஒரு விசித்திரமான பழக்கம் உள்ளது. அதாவது, பருவம் அடைந்த சிறுமிகளை, தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபடுத்துகிறார்கள்.
இதற்கு அந்த சிறுமி மறுத்தால், அந்த குடும்பத்திற்கு சாபம் வந்து சேரும் என்று நம்புகிறார்கள். அந்த கிராமத்தில் இதற்காகவே ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் எரிக் அனிவா. ஆனால் இவரை எல்லோரும் ஹெய்னா (கழுதைப் புலி) என்று அழைக்கிறார்கள்.
இதில் ஒரு கொடிய செய்தி என்னவெனில், எரிக் அனிவா ஒரு எய்ட்ஸ் நோயாளி. இதனால், அங்கு ஏராளமான சிறுமிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. ஹெரிக் இந்த வேலையில் ஈடுபடுவதை அவரின் 2 மனைவிகளும் விரும்பவில்லை. ஆனாலும், ஹெரிக் நிறுத்திய பாடில்லை.