அமெரிக்க அதிபராக ஹிலாரியே பொருத்தமானவர் : ஆதரவு தெரிவித்த ஒபாமா

வெள்ளி, 10 ஜூன் 2016 (16:39 IST)
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு, தற்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற நவம்பார் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 
இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என்ற இரு கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை அங்குள்ள மாகாணங்களில் நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்(69), ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை பெற்றுவிட்டார்.  அதேபோல், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் தகுதி பெற்றுள்ளர். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  
 
இந்நிலையி, ஹிலாரி கிளிண்டனுக்கு ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் “ஜனாதிபதி பதவிக்கு எப்போதுமே மிகவும் தகுதி வாய்ந்த நபர் ஹிலார் கிளிண்டன்” என்று கூறியுள்ளார். இதனால் ஹிலாரிக்கும் மேலும் ஆதரவு பெருகியுள்ளது. 
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஹிலாரி “இது முற்றிலும், சந்தோஷமும் கவுரவத்தையும் அளிக்கிறது. நானும், ஒபாமாவும் கடந்த காலத்தில் கடுமையான போட்டியாளராக இருந்து பின் நண்பர்களாக மாறியவர்கள்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்