வம்புக்கு இழுத்த பெண்ணை கலாய்த்த ஒபாமா!!

சனி, 15 அக்டோபர் 2016 (11:40 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில், அங்கு அதிபர் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் தனது ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்து நடந்த கூட்டத்தில் ஒபாமா கலந்து கொண்டார்.

 
ஒஹியோவில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசத்துவங்கிய சிறிது நேரத்திலேயே, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அவரின் பேச்சுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் கத்த துவங்கினார். முதலில் ஒபாமா இதை பொருட்படுத்தாமல் இருந்தார். 
 
ஆனால் அந்த பெண்ணின் கூச்சல் அதிகமானது, இதனால் கடுப்பான ஒபாமா அவரிடம், எனக்கு வயதாகிவிட்டதால், நீங்கள் கூறுவது எனது காதில் விழுகவில்லை. அதனால் நீங்கள் சொல்லவந்ததை தெளிவாக கடிதமாக எழுதி எனக்கு அனுப்பிவையுங்கள் என கேலி செய்யும் விதத்தில் தெரிவித்துள்ளார்.
 
இதன் பின்னர், பாதுகாப்பு அதிகாரிகள் கூச்சலிட்ட பெண்ணை உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேற்றினர். 

வெப்துனியாவைப் படிக்கவும்