340 பேருக்கு மரண தண்டனை: கடுமையான சட்டமா? சர்வாதிகாரமா?

வியாழன், 29 டிசம்பர் 2016 (15:39 IST)
வடகொரியாவில் அதிபர் கிம் ஜோங் யுன் சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறார். கடுமையான சட்டங்கள் பிறப்பிப்பத்தில் பெயர் பெற்ற இவர் கடந்த 5 வருட ஆட்சியில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார்.


 

 
வடகொரியாவின் அதிபர் அணு ஆயுதம் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன், கடுமையான சட்டங்களை பிறப்பித்து வருகிறார். கிம் ஜோங் யுன் கடந்த 5 வருட காலமாக சர்வாதிகார ஆட்சி செய்து வருகிறார்.
 
அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு கடுமையான சட்டங்களை அடங்கியுள்ளது. இணையதளம் பயன்படுத்துவதில் கூட பல்வேறு கட்டுபாடுகள் உள்ளன. கடந்த 5 வருடத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க உத்தரவிட்டுள்ளார் அதிபர் கிம் ஜோங் யுன்.
 
இதுவரை 340 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்களின் 140 பேர் மூத்த அரசாங்க அதிகாரிகள். அதிலும் ஒருவர் அரசு கூட்டத்தின்போது தூங்கியதற்காக துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை தென் கொரிய தேசிய பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
 
இதன்மூலம் உலகின் ஆபத்தான தலைவர்களின் ஒருவர் கிம் ஜோங் யுன் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்