பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு வடகொரியா? - அமெரிக்கா பரிசீலனை

திங்கள், 22 டிசம்பர் 2014 (13:08 IST)
சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் வடகொரியாவை மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கப் புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளிலிருந்து தகவல் திருடப்பட்டுள்ளன. இதற்கு வடகொரியாதான் காரணமாக இருக்கும் என அமெரிக்கா கருதுகிறது.
 
ஏனெனில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-ஐ பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கொண்ட ’த இன்டர்வியு’ என்கின்ற திரைப்படத்தை சோனி நிறுவனம் வெளியிட இருந்தது. இந்நிலையில்தான் சோனி  நிறுவனத்தின் கணினிகள் கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
 
இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளின் சோனி கணினிகளில் இருந்து தகவல்கள் திருடப்பட்ட விவகாரம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், இந்த செயலில் வடகொரியா ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது போர்க்குற்றமாக கருதப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், இணையத்தில் நடத்தப்பட்டுள்ள மிக மோசமான தாக்குதல் இது என்றும் ஒபாமா தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தினால் சோனி நிறுவனம் வெளியிட இருந்த இத்திரைப்பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்