மூன்றாவது உலக போரை நடத்தாமல் விடமாட்டோம்; அடம்பிடிக்கும் வடகொரியா

வியாழன், 2 நவம்பர் 2017 (13:24 IST)
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரை தாக்கும் நவீன ஏவுகணை சோதனையில் வடகொரியா ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
வடகொரியா கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் அச்சத்தில் உள்ளனர். 
 
அமெரிக்கா, வடகொரியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொருளாதார தடை விதிக்கப்பட்டும் வடகொரியா சற்றும் அசராமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.  
 
வடகொரியா உலக நாடுகளுக்கு தனது பலத்தை வெளிக்காட்ட அமெரிக்க தலைவர் வாஷ்ங்டன் வரை சென்று தாக்கு சக்தி கொண்ட புதிய ஏவுகணை சோதனையில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஜப்பான் செல்லும் நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனையில் தீவிரம் காட்டி வருவது மூன்றாவது உலக போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக சிலர் கூறிவருகின்றனர்.
 
ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் மூன்றாம் உலகப்போர் நடைபெறாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அமெரிக்கா தனது பொறுமைக்கு எல்லை உள்ளது என கூறி வருகிறது. 
 
ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் எந்நேரத்திலும் நாம் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். எல்லாவற்றையும் தாண்டி என்ன செய்தாலும் சரி அமெரிக்காவை காலி செய்யாமல் விடமாட்டோம் என்பதில் வடகொரியா உறுதியாக உள்ளது. 
 
வடகொரியா அதிபரின் பிடிவாதம் நிச்சயம் மூன்றாம் உலக போருக்கு விதையாக அமையும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்