பொதுமக்கள் பலர் பலியாகியுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலமாகியுள்ளனர். ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு தேவையான பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலினால் உக்ரைனின் பல பகுதிகள் சேதமடைந்தன. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் வ்ளாடிமிர் ஜெலன்ஸ்கி, தங்களுக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்தால் ரஷ்யாவை தடுக்க முடியும் என தெரிவித்திருந்தார். வான்வழி படையில் உக்ரைனிடம் போதிய பாதுகாப்பு இல்லாததால் அமெரிக்காவின் எப்16 போர் விமானம் வேண்டும் என்பதை குறிப்பிட்டே ஜெலன்ஸ்கி அவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.