எண்ணெய் வளங்களை பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு மீண்டும் பணம்

புதன், 3 ஆகஸ்ட் 2016 (05:50 IST)
நைஜர் டெல்டாவில், தனது எண்ணெய் வளங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு நைஜீரிய அரசு மீண்டும் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
 

 
கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர்களுக்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டிருந்ததில் இருந்து தாக்குதல்கள் தீவிரமடைந்தன. அதனால் எண்ணெய் உற்பத்திப் பணிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
 
2009ல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் தீவிரவாதிகள் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை கொடுத்தால், அவர்கள் எண்ணெய் குழாய்களை சேதப்படுத்துவதை நிறுத்துவதாக தெரிவித்தனர்.
 
பொதுமன்னிப்பு ஒப்பந்தத்தின் போது அதன் அங்கமாக இல்லாத 'நைஜர் டெல்டா அவென்ஞ்சர்ஸ்' என்ற ஒரு புதிய தீவிரவாதக் குழு தங்களது குழுதான் பெரும்பாலான சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்