துப்பாக்கி முனையில் 200 மாணவர்கள் கடத்தல்! – நைஜீரியாவில் அதிர்ச்சி!

திங்கள், 31 மே 2021 (08:38 IST)
நைஜீரியாவில் உள்ள இஸ்லாமிய பள்ளி ஒன்றில் நுழைந்த மர்ம நபர்கள் 200 மாணவர்களை கடத்தி சென்றதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவின் தெகினா என்ற பகுதியில் சாலிகு டாகோ இஸ்லாமியா என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய கல்வி அளிக்கும் இந்த பள்ளிக்குள் நேற்று மதியம் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மாணவர்கள் 200 பேரை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் பள்ளி மாணவர்களை பணய தொகை கேட்டு கடத்துவது நைஜீரியாவில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்