சிறுமியின் உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு - 2 போகோ ஹராம் தீவிரவாதிகள் கைது

வியாழன், 31 ஜூலை 2014 (15:18 IST)
நைஜீரியாவில் உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு பெல்ட் அணிந்திருந்த 10 வயது சிறுமியோடு பயணித்த போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இது குறித்து அரசு செய்தி தொடர்பாளர் மைக் ஒமேரி தெரிவிக்கையில், 
 
'வடக்கு கட்ஸினா பகுதியில் கார் ஒன்றில் சென்ற 10 வயது சிறுமி ஹடிசாவின் உடலில் வெடிகுண்டு பெல்ட் கட்டப்பட்டிருந்தது. சிறுமியுடன் காரில் பயணித்த இரு போகோ ஹராம் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இலியா, சைனப் ஆகிய அந்த இருவர் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றனர், அப்போது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்' எனத் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்