வெனிசுலாவில் மதுரோ அரசை கவிழ்க்க சதி: 8 ராணுவ அதிகாரிகள் கைது

சனி, 9 மே 2015 (15:02 IST)
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் அரசை கவிழ்க்க சதி செய்த 8 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.


 

 
வெனிசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்டு வருகிறார். ஆனால் இவருடைய ஆட்சிக்கு எதிராக அமெரிக்கா சதி செய்து வருகிறது.
 
வெனிசுலாவில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களையும், சில ராணுவ அதிகாரிகளையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மதுரோ ஆட்சியை கவிழ்க்க முயன்று வருகிறது.
 
இந்நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் 8 ராணுவ உயர் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக வெனிசுலா உளவு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
இதைத் தொடர்ந்து, அந்த 8 ராணுவ உயர் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வெனிசுலா பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
வெனிசுலாவில் கடந்த 1999 ஆம் ஆண்டு, இடதுசாரி தலைவரான ஹூயூகோ சாவேஸ் அதிபர் பதவி ஏற்றதில் இருந்து வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் மோதல் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்