41 வயதான மமடி, தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ளதால், ஆப்பிரிக்காவின் இரண்டாவது இளம் தலைவராக அறியப்படுகிறார். கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கினி ஆட்சிக் கவிழ்ப்பை சர்வதேச அரங்கில் பலரும் பரவலாக கண்டித்தனர்.
மேலும் எகோவாஸ் அமைப்பு மமடிக்கு எதிராக தடைகளை விதித்தது. புதிய அரசமைப்பு சட்டத்தை எழுதுவது, ஊழலை சமாளிப்பது , தேர்தல் முறையை மாற்றுவது, நம்பத்தகுந்த, வெளிப்படையான தேர்தலை நடைமுறைபடுத்துவது போன்ற பணிகள் மூலம் நாட்டை மறுகட்டுமானம் செய்வதே தன் நோக்கம் என புதிய அதிபர் கூறியதாக ஏ.எஃப்.பி முகமை குறிப்பிட்டுள்ளது.