நேபாள நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 6,624 ஆக அதிகரிப்பு

சனி, 2 மே 2015 (21:12 IST)
நேபாளத்தில் நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6624 ஆக அதிகரித்துள்ளது.
 
பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படுகிறது. மொத்தம் 14,025 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

 
இன்று காலை நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 4.5 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியடைந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
 
கடந்த சனிக்கிழமை (25ஆம் தேதி) ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து அந்நாட்டு மக்கள் மீளவில்லை. நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச குழுவினர், மீட்புப் பணிகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிந்துபால்சவுக் பகுதியில் மட்டும் 40,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்