படைப்பாற்றல் மிக்க நியான்டர்தால் மனிதர்கள்; 170,000 ஆண்டுகள் பழமையான கட்டிடம் கண்டுபிடிப்பு

வியாழன், 26 மே 2016 (18:08 IST)
நியான்டர்தால் மனிதர்கள் முன்பு அறியப்பட்டதை விட, மிகவும் அறிவார்ந்த மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருந்திருக்கக் கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
 

 
ஃபிரான்சில் 1990-களில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறு பாறை கட்டுமானங்கள், 170,000 ஆண்டுகளுக்கு பழமையான காலத்தை சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அவற்றைக் கட்டியவர்கள் நியான்டர்தால் மனிதர்களாகத்தான் இருக்கும் எனறு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 
ஏனெனில், நவீனகால மூதாதையர்கள் அந்தக் கால கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
 
நூற்றுக்கணக்கான உடைந்த கசிதுளிப்படிவுகளால் கட்டப்பட்ட அடிப்படை சுவர்களை கொண்டதாக இந்த கட்டுமானம் உள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்