அமெரிக்க அதிபரின் தேசிய பாதுகாப்பு அலோசகர் திடீர் ராஜினாமா: ரஷ்யாவின் சதியா?

புதன், 15 பிப்ரவரி 2017 (11:38 IST)
அமெரிக்க பாதுக்காப்புத்துறை புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவரான மைக்கேல் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். டிரம்ப் ஆட்சிக்கு வரும் முன்னரே இவரை தேசிய பாதுகாப்பு அலோசகராக நியமித்தார்.


 
 
இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பாக டிரம்ப்புக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்ததுடன், அவரது தேர்தல் பிரச்சார கூட்டங்களில் ஆரம்பநிலை பேச்சாளராக இருந்தார்.
 
டிரம்ப் அதிபராக பதவியேற்பதற்கு முன்னர், அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்திருக்கும் தடைகளை அகற்றுவது குறித்து அமெரிக்க சட்டத்திற்கு எதிரான வகையில், ரஷ்ய தூதரோடு கலந்துரையாடியதாக மைக்கேல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், மைக்கேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அதிபர் டிரம்ப், மற்றும் துணை அதிபர் மைக் பென்சிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்