செவ்வாய் கோளில் மிகப்பெரிய கடல்: புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்

வெள்ளி, 6 மார்ச் 2015 (15:36 IST)
செவ்வாய் கோளில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



 
செவ்வாய் கோளில் நீர் உள்ளதா என்பது குறித்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தப்பட்டும், இது குறித்து விவாதிக்கப்பட்டும் வரும் நிலையில், அங்கு ஒரு பெரிய கடலே இருந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
அந்தக் கடல் பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



 
பல மில்லியன் ஆண்டுகளாக இந்தக் கடல், செவ்வாய் கோளின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 
முன்னதாக, செவ்வாய் கோளில் இரண்டு விதமான நீர் மூலக்கூறுகள் கண்டுபிடிக்கபட்டுள்ளன.
 
பூமியில் இருப்பது போல இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்சிஜன் அணுவுடன் கூடிய H2O மூலக்கூறும், 
மேலும் அடுத்தப்பக்கம்...

ஒரு ஹைட்ரஜன் மற்றும் டியூட்ரியம் என்ற அணுவை கொண்ட HDO என்ற மற்றொரு மூலக்கூறும் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



 

 
செவ்வாய் கோளில் மனிதர்கள் குடியேறுவது குறித்து தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்துவரும் நிலையில், அங்கு மிகப்பெரிய கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருப்பது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்