அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு பிறந்த நாள் தெரிவித்த நரேந்திர மோடி

புதன், 5 ஆகஸ்ட் 2015 (03:42 IST)
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
 

 
அமெரிக்க அதிபர் பராக் உசேன் ஒபாமா ஆகஸ்ட் 4 ம் தேதி 1961 ஆம் ஆண்டுப் பிறந்தவர்.  2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார். நவம்பர் 6, 2012 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற மிட்ராம்னியை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.
 
அமெரிக்க வரலாற்றில் ஆபிரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் ஒபாமாவுக்கு உள்ளது.
 
இந்த நிலையில், ஒபாமா பிறந்த நாள் குறித்து, இந்திய பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
 
அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு, வரும் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக இருக்க வாழ்த்துகள். நீங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.  இதே போல, உலகத் தலைவர்கள் பலரும் ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்