வாலிபரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிச் சமைத்த பெண்

புதன், 19 நவம்பர் 2014 (19:18 IST)
அமெரிக்காவின் புளோரிடாவில் பணப் பிரச்சனையில் வாலிபர் ஒருவரைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிச் சமைத்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள டெல்டோனா நகரைச் சேர்ந்தவர் ஏஞ்சலா ஸ்டோல்ட். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே மாமிசத்தை தீயில் போட்டு வேக வைக்கும்போது வெளிப்படும் வாடை வீசியது. 
 
இதனால் சந்தேகம் அடைந்த ஏஞ்சலா, காவல் துறையிடம் புகார் செய்தார். உடனே அங்கு வந்த காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது அண்டை வீட்டில் குடியிருக்கும் 42 வயது பெண் ஒரு வாலிபரைக் கொன்று, தடயத்தை மறைக்க அவரது உடல் பாகங்களைத் தீயில் போட்டு எடுத்தும், சமையல் செய்ததும் தெரிய வந்தது. 
 
உடனே அந்தப் பெண்ணைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் ஜேம்ஸ் ஷெப்பர் (36) எனக் கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவராக பணி புரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கணக்கு வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து வங்கியில் எடுக்கப்பட்ட பணத்தைப் பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் டிரைவர் ஜேம்ஸ் ஷெப்பர் கொலை செய்யப்பட்டார். தடயத்தை மறைக்க, அவரது உடல் பாகங்களைத் தீயிட்டு எரித்ததை அப்பெண் ஒப்புக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்