எவரெஸ்ட்டில் பனிச்சரிவு: 13 பேர் பலி

வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (15:05 IST)
எவரெஸ்ட் மலையின் நேபாள எல்லை பகுதியில், பாப்கான் பீல்டு என்னுமிடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி, 13 பேர் பலியானதகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இம்மாத இறுதியில் மலையேற்றம் தொடங்க உள்ள நிலையில், அங்கு திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும், மலையேற்ற வீரர்களுடன் துணையாகச் செல்லும் ஷெர்பாக்கள் என்று கூறப்படுகிறது.
 
அங்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 13 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். இந்நிலையில் மேலும் பலரைக் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடல் மட்டத்திலிருந்து சுமார் 5800 மீட்டர் உயரத்தில் பாப்கான் பீல்டு என்று அழைக்கப்படும் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், மேலும் பலர் இதில் காயம் அடைந்ததாகவும் ஒரு ஷெர்பா கூறியுள்ளார்.
 
நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டிகள் மலையேறும் பாதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பனிச்சரிவு ஏற்பட்டதால் அவர்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்