காட்டு தீயில் ஆயிரக்கணக்கில் பலியான கோலா கரடிகள்..

Arun Prasath

புதன், 11 டிசம்பர் 2019 (10:19 IST)
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 2,000க்கு மேற்பட்ட கோலா கரடிகள் இறந்து போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டு தீ பரவியது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு மேலாகியும் இந்த காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த காடுகளில் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் உள்ள நிலையில் காட்டு தீயில் சிக்கி 2,000 க்கும் மேற்பட்ட கோலா கரடிகள் பலியாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயிலிருந்து உயிர் தப்பிய கோலா கரடிகளை தன்னார்வலர்கள் மீட்டு சிகிச்சை அளித்து பாதுகாத்து வருகின்றனர்.

இந்த காட்டுத் தீயில் கோலா கரடிகளின் வாழ்விடங்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக சூழலியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். மேலும் காட்டுத்தீ தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்