துருக்கி-சிரியா பூகம்பம்: 15000ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!

வியாழன், 9 பிப்ரவரி 2023 (08:06 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடும் பூகம்பம் ஏற்பட்ட நிலையில் இந்த பூகம்பத்தில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் ஆகின.
 
இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உலக நாடுகளின் உதவியுடன் துருக்கி மற்றும் சிரியா நாட்டின் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். 
 
அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் பூகம்பங்கள் காரணமாக இதுவரை 15,000 பேர் உயிர் இழந்திருப்பதாகவும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் இன்னும் 25 சதவீதம் கூட முடியாத நிலையில் இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இந்தியா உள்பட உலக நாடுகள் மீட்டு பணிக்கும் அந்நாட்டு மக்களின் அத்தியாவசியமான தேவைக்கும் உதவி செய்து வருகின்றன என்றும் குறிப்பாக மருத்துவ உபகரணங்கள் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்