அமெரிக்க அதிபர், சீன அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து மோடி தன்னை ஒரு சர்வதேச தலைவராக நிலை நிறுத்திக் கொண்டதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கு சர்வதேச அளிவில் எடுத்த முயற்சிகள், கருப்புப் பணத்தை ஒழிக்க பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது போன்ற நடவடிக்கை காரணமாக அவருக்கு அந்த இடம் கிடைத்துள்ளதாக அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.